MARC காட்சி

Back
சாரநாதப்பெருமாள் கோயில்
245 : _ _ |a சாரநாதப்பெருமாள் கோயில் -
246 : _ _ |a திருச்சாரம்
520 : _ _ |a 108 திவ்ய ஸ்தலங்களில் இத்திருத்தலம் தவிர பெருமாள் தனது 5 தேவிகளுடன் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை. இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கொப்பானதாகும். திருமால் காவேரிக்குப் பிரத்யட்சமானது தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகட்கு ஒரு முறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது இந்த ஸார புஷ்கரணியில் நீராடுவது குடந்தை என்னும் கும்பகோணத்தில் கொண்டாடப்படும் மகாமகத்திற்கு ஈடானதாகும். குடந்தையில் உள்ள சித்திரத்தேர் மற்றும் திருவாரூர்த் தேரினைப்போன்று இங்கு உள்ள தேர் மிகப் பெரியதாகும். எம்பெருமான் குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால் “மாமதலையாய்”என்றும் காவிரிக்கும் மேன்மை அளித்ததால் “கங்கையிற் புனிதமாய காவேரி” என்றும் ஆழ்வார்கள் மங்களாசாசித்துள்ளனர். திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். மொத்தம் 13 தீஞ்சுவைப் பாக்கள். சத்தியகீர்த்தி என்ற சோழவரசன் புத்திரப்பேறு இல்லாது, மார்க்கண்டேய முனிவரால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டு, இப்பெருமானை வேண்டி புத்திரபேறடைந்து, விமானம், மண்டபம் போன்ற திருப்பணிகள் செய்து, சித்திரை மாதத்தில் பிர்மோத்ஸவமும் நடத்தி வைத்தான்.
653 : _ _ |a கோயில், வைணவம், திவ்யதேசம், மங்களாசாசனம், 108 திருப்பதி, வைணவத்தலம், திருச்சேறை, திருச்சாரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருமங்கையாழ்வார், சாரநாதர், பெருமாள், காவிரி
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 0435-2468078, 2468001, 9444104374
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / சோழர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
914 : _ _ |a 10.87878293
915 : _ _ |a 79.454391
916 : _ _ |a சாரநாதன்
917 : _ _ |a ஸ்ரீ சாரநாதப் பெருமாள்
918 : _ _ |a சார நாயகி அல்லது சார நாச்சியார், பஞ்சலெட்சுமி
923 : _ _ |a சார புஷ்கரணி
925 : _ _ |a ஆறுகால பூசை
926 : _ _ |a தைப்பூசத் திருவிழா
927 : _ _ |a தஞ்சையை ஆண்ட அழகிய மணவாள நாயக்க மன்னராலும் அவரது மந்திரி நரச பூபாலராலும், இக்கோவிலின் பிரதானச் சுவர்களும், சற்றேறக்குறைய இன்றுள்ள அமைப்பில் கட்டப்பட்டது. இம்மன்னர் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலன் சன்னதிக்கு திருப்பணிக்காக வண்டிவண்டியாகக் கல் அனுப்பிய போது, வண்டிக்கு ஒரு கல்லாக, திருச்சேறை கோவில் பரிபாலனத்திற்கு நரச பூபாலன் இறங்கி வைக்க இதைச் செவியுற்ற மன்னன் அது உண்மையாவென்று சோதிக்க அங்கு வந்தான். இதனையறிந்த நரச பூபாலன் இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்குமாறு இராஜகோபாலனை மனதுள் தியானிக்க மன்னர் வந்து இங்கு இறங்கியதும் இந்த திருச்சேறைத் திருமால் அவருக்கு மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சியளிக்க அது கண்டு மிகவும் ஆச்சர்யமுற்ற மன்னன், நரசபூபாலனைப் பாராட்டியது மட்டுமன்றி தானும் உடனிருந்து எண்ணற்ற சேவைகள் செய்து பெருவாரியாக நிலங்களையும் தானமளித்தார் என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மாவடிப்பள்ளம் “பாபாஷாகேப்” என்னும் இஸ்லாமியர் இப்பெருமானை வணங்கி புத்திரப்பேறு பெற்று இத்தலத்திற்கு பூமிதானம் செய்தாரென்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன. கோயில் உள் சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலின் மூலவர் சாரநாதன் நின்ற கோலத்தில் கிழக்குமுகமாக உள்ளார். இக்கோவிலில் மட்டுமே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் காணப்படுகிறார். மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர். குளக்கரையில் காவேரியம்மனுக்குத் தனிக்கோவில் உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திசையில் அனுமன் சன்னிதி அமைந்துள்ளது.
930 : _ _ |a இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணத்தில் மகேஷ்வர நாரத் ஸம்வாதத்தில் 1 முதல் 6 அத்தியாயம் வரையிலும் பவிஷ்ய புராணத்தில் 68 முதல் 72 வரை உள்ள அத்தியாயங்களிலும் பேசப்படுகிறது. முன்பு ஒரு பிரளயத்தின்போது பிரம்மா சிறிது மண் எடுத்து ஒரு கடம் பண்ணி அதில் சகல வேதங்களையும் மறைத்து வைத்துக் காப்பாற்ற எண்ணி பல இடத்தில் மண் எடுத்துப் பானை செய்யவும், எல்லாம் உடைந்து போக இறுதியில் வழக்கம்போல் மஹாவிஷ்ணுவைத் துதி செய்ய, அவர் வழக்கம் போல் பல ரிஷிகளும் தவஞ்செய்யக்கூடியதும், தனக்கு மிகவும் உவப்பானதுமான “ஸார ஷேத்திரத்தில்” மண் எடுத்துக் கடம் செய்யுமாறு கூற பிரம்மனும் ஸாரச் சேத்திரம் என்னும் இந்தத் திருச்சேறை வந்து மண் எடுத்துக் கடம் செய்து வேதங்களை அதிலிட்டுவைத்துக் காத்தார். மண் எடுத்த இடமே ஸார புஸ்கரணியாயிற்று. ஒரு காலத்தில் விந்திய மலையின் அடிவாரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, காவேரி, கோதாவரி ஆகிய 7 நதிகளும் கன்னிகைகளாக மாறி விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியாகச் சென்ற விச்வாவஸ் என்னும் ஒரு கந்தர்வன் இவர்களை கண்டு வணங்கிவிட்டுச் சென்றான். இவன் யாருக்கு வணக்கம் தெரிவித்தான் என்று அவர்களுக்குள் சந்தேகம் வந்துவிட்டது. அப்போது மீண்டும் அவ்வழியே திரும்பி வந்த இந்தக் கந்தர்வனைக் கண்டு தாங்கள் யாருக்கு வணக்கம் செலுத்தினீர்கள் என்று கேட்க உங்களில் யார் பெரியவரோ அவருக்கே என்று சொல்லிச் சென்றுவிட்டான். இதில் மற்ற நதிகள் எல்லாம் விலகிக்கொள்ள கங்கையும் காவிரியும் தாமே நதிகளுள் பெரியவர்கள். ஆகவே என்னைத் தான் சொன்னான், என்னைத்தான் சொன்னான் என்று இருவரும் கூற வாதம் வளர்ந்து முடிவில் பிரம்மனிடமே விடைபெறச் சென்றனர். அப்போது பிரம்மன் கூறினான். திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது சத்திய லோகம் என்னும் எனது பிர்ம்ம லோகம் வரை நீண்ட எம்பெருமானது பாதங்களை நான் திருமஞ்சனம் செய்ய அதுவே பெருக்கெடுத்து ஓடி கங்கையாயிற்று. எனவே கங்கையே புனிதமானவள், உயர்வானவள் என்று கூறினார். இதைக் கேட்டு மிகவும் வருத்தமுற்ற காவேரி நான் கங்கையினும் பெருமை பெற்றவள் என்ற பெயரை தனக்குத் தரவேண்டுமென்று கேட்க, அது தன்னால் முடியாதென்றும் சர்வ வல்லமை பொருந்திய மஹாவிஷ்ணுவால்தான் அது முடியுமென்றும், உனக்கு அப்பதம் சித்திக்க வேண்டுமென்றால் ஸாரபுஷ்கரிணியில் உள்ள அரச மரத்தடியில் திருமாலைக் குறித்து கடுந்தவஞ் செய்யுமாறு கூற, அவ்வண்ணமே காவேரி கோடையில் பஞ்சாக்கினி மத்தியிலும், குளிர்காலத்தில் ஜலத்தின் மத்தியிலும் கடுந்தவஞ்செய்ய, மஹாவிஷ்ணு ஒரு தை மாச பூச நட்சத்திரத்தன்று சிறு குழந்தையாய்த் தோன்றித் தவழ்ந்து வர அந்தக் கோடி சூர்ய ப்ரகாசத்தைக் கண்ட காவிரி இது சாதாரணக் குழந்தையன்று எம்பெருமானே என்று தீர்மானித்து தொழுது நின்றாள். உடனே எம்பெருமான் தனது மழலை வேடத்தை மறைத்து கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்னும் 5 தேவிகள் புடைசூழ சங்கு சக்ர தாரியாக காட்சியளித்தார். இக்காட்சியைக் கண்டு பேரானந்தமும் மயிர்க்கூச்செறிப்பும் கொண்ட காவேரி பலவாறு போற்றி எம்பெருமானைத் துதித்துப் பாடினாள். என்ன வரம் வேண்டுகிறாய் காவேரி, என்று பெருமாள் கேட்டதும், தாங்கள் இதே கோலத்தில் இங்கு காட்சி தரவேண்டுமென்றும், கங்கையினும் மேன்மையைத் தனக்கு தரவேண்டுமெனவும் வேண்டினாள். அவ்விதமே அருளிய எம்பெருமான் நான் திரேதா யுகத்தில் நின்னிடத்தில் தங்குவேன் என்று கூறினார். அவ்வண்ணமே இராமாவதாரம் முடிந்து, விபீஷணன் எம்பெருமானை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக காவிரியில் பள்ளிகொண்டார்.
932 : _ _ |a கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டமைந்துள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ராஜ கோபுரம் 90 அடி உயரமானது. கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை
935 : _ _ |a கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியே செல்கின்றன.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a திருச்சேறை
938 : _ _ |a கும்பகோணம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a கும்பகோணம் நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000169
barcode : TVA_TEM_000169
book category : வைணவம்
cover images TVA_TEM_000169/TVA_TEM_000169_திருச்சேறை_சாரநாதப்பெருமாள்-கோயில்-0004.jpg :
Primary File :

TVA_TEM_000169/TVA_TEM_000169_திருச்சேறை_சாரநாதப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000169/TVA_TEM_000169_திருச்சேறை_சாரநாதப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000169/TVA_TEM_000169_திருச்சேறை_சாரநாதப்பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_000169/TVA_TEM_000169_திருச்சேறை_சாரநாதப்பெருமாள்-கோயில்-0004.jpg

TVA_TEM_000169/TVA_TEM_000169_திருச்சேறை_சாரநாதப்பெருமாள்-கோயில்-0005.jpg